விக்கிரவாண்டி ஹோட்டல் – வழிப்பறி கொள்ளை

விக்கிரவாண்டி ஹோட்டல் J கிளாசிக் – அட்டூழியம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த உணவகத்தை பற்றி முகநூலில் வந்ததை பலமுறை படித்துள்ளேன், இருப்பினும் நம் ஊரில் உள்ள உணவகம் ஆச்சே என்று அதன் நிறைகள் என்னவென்று அரிய இன்று இரவு(18/7/2017) டிபன் அங்கே சாப்பிடலாம் என்று உள்ளே சென்றேன்.

முதல் படத்தில் லுங்கியில் இருப்பவர் தான் நான் அமர்ந்த டேபிள்-ஐ கவனித்தார். இட்லி, புரோட்டா, தோசை, பிரியாணி உள்ளது என்றார். நான் தோசை என்றேன். எதிரில் அமர்ந்தவர் இட்லி என்றார். இட்லி தோசை இரண்டும் சிறிது நேரத்தில் வந்தது, தோசைக்கு கறிக்குழம்பும் இட்லிக்கு முட்டை குழம்பும்.

முதல் தோசையை உண்ணும் போதே அருகாமையில் இருந்த விலைப்பட்டியல் பக்கம் பார்வை நகர்ந்தது. தோசை(2) – 60 இட்லி(செட்) – 35. மனதில் ஓர் ஆனந்தம், புறவழிச்சாலையில் இந்த விலை நிர்ணயம் சரியே என மனதில் எழுந்தது. உடனே எதிரில் இருந்தவரிடம் இந்த இட்லி முட்டை குழம்பிற்கு 35 ரூபாய் பரவாயில்லையே என்றேன். அவர் இலையில் மீதம் இருந்த ஒரு இட்லியை என்மேல் வீசாத்துதான் பாக்கி.

முட்டை குழம்புக்கும் காசு என்றார் தன் விரலை பட்டியலை நோக்கியபடி. என் கண்கள் கறிகுழம்பு விலையை நோக்கி பாய்ந்தது 40 ரூபாய(முட்டை குழம்பும்). திரும்பி பார்த்தால் அவர் அந்த இட்லியை வைத்துவிட்டு கைகழுவ சென்று திரும்பினார். அவர் பில் தொகை 75 ரூபாய். 100 ரூபாய் நீட்டிய அவரிடம் 20 பாக்கி கொடுத்து தலையை அசைத்தார் T-Shirtல் உள்ள நபர். Tips 5 ரூபாய் அவரே நிர்ணயம் செய்துக்கொண்டார்.

இப்போது பில் செலுத்த நான் தயார். 100 ரூபாய் என்றவுடன் 60 தானே என்றேன். இல்ல சார் இது அசைவ ஹோட்டல் என்றார் எனக்கு பரிமாறியவர். தோசை 60 ₹ தானே என மீண்டும் கேட்க இல்ல சார் குருமாவுடன் சேர்த்து 100 என்றார் தலையை சாய்த்தபடி. ஏன் முன்பே சொல்லியிருந்தார் சட்னி மட்டும் போதும் என்றிருப்பேன் என்று கூறிவிட்டு ₹ 100 கொடுத்தேன், வாங்கிக்கொண்டு மீண்டும் கையை நீட்டினார் Tips கேட்டு. தோசை சட்னி மட்டும் போட்டு ₹60 வாங்கியிருந்தால் மீதம் வரும் சில்லறையில் பத்தோ இருபதோ தர தோன்றும். அதை கூறியபடியே வெளியே நடையை கட்டினேன்.

இனிமேல் இங்கே உணவருந்த செல்பவர்கள் இந்த தந்திர வலையில் சிக்காமல் இருக்க முன்கூட்டியே தாங்கள் உண்ண நினைப்பதற்கு பணம் செலுத்திவிட்டால் குருமா செலவு மிச்சம்.

Leave a Reply

Facebook Auto Publish Powered By : XYZScripts.com